திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு!

கோவை: திருப்பூர் மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் ஆய்வு செய்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரக்கூடிய கொரோனா கட்டுப்பாட்டு மையத்தை நேரில் ஆய்வு செய்த அமைச்சர், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பழைய பேருந்து நிலையம் கட்டுமானப்பணி மார்க்கெட் கட்டுமான பணிகள் ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்தார்.



இதையடுத்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு பணிகள் குறித்த அனைத்து அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, திருப்பூரில் 51% சதவிகிதத்திலிருந்து 8% சதவிகிதமாக குறைந்துள்ளதாகவும், முற்றிலுமாக குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், திருப்பூரில் குடிநீர் பிரச்சினை தேவைகள், பாதாள சாக்கடை திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.

மேலும், ஊரடங்கு காரணமாக ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் 6 மாதத்தில் சரிசெய்யப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்படும் என்று கூறிய அவர், கிராமப்பகுதிகளில் 100 குடும்பங்களுக்கு ஒரு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசிகள் கையிருப்பு வந்தது முதல் போடப்பட்டது. இந்த வாரத்திற்குள் மத்திய அரசிடம் இருந்து பெற முதல்வர் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...