வால்பாறை: வால்பாறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வைசன் அறக்கட்டளை சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கினால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வால்பாறையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வைசன் அறக்கட்டளை மற்றும் வால்பாறையில் உள்ள சக்ஷம் அமைப்பும் இணைந்து நிவாரண உதவி வழங்க முடிவு செய்தன.

அதன்படி வால்பாறையில் காந்தி சிலை வளாகத்தில் வைசன் அறக்கட்டளை நிர்வாகி கார்த்திக் தலைமையில் மாற்றுத் திறனாளிகளுக்கு இன்று அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.
இதில் வால்பாறை சக்ஷம் அமைப்பின் நிர்வாகிகள் T. ராஜா R. கணேஷ் K. M. தங்கவேல் N. வினு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைசன் அறக்கட்டளை நிர்வாகி கார்த்திக் செய்தியாளரிடம் கூறுகையில், “வால்பாறை பகுதியில் அனைத்து தேயிலைத் தோட்டங்களிலும் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதிவாசி பழங்குடியின மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது,” என்றார்.