கோவை மாவட்ட ஆட்சியரிடம் 25 ஆக்சிசன் செரிவூட்டிகளை வழங்கினார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

கோவை: கோவை மாவட்ட ஆட்சியரிடம் 25 ஆக்சிசன் செரிவூட்டிகளை முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி வழங்கினார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியரிடம் 25 ஆக்சிசன் செரிவூட்டிகளை முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி மற்றும் கோவை மாவட்ட எம்எல்ஏக்கள் ஒன்றாக இணைந்து வழங்கினர்.



பின்னர், செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், நாங்கள் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இன்றி எல்லா சூழ்நிலையிலும் பொதுமக்களை சந்தித்து தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறோம். கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதியிலும் அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து பொதுமக்கள் தொடர்பு கொண்டு, தொகுதியில் உள்ள குறைகள் மற்றும் கொரோனா பாதிப்பு குறித்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.



ஆதலால் கோவை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டம் சார்பாகவும் அதிமுக சார்பாகவும் இன்று மாவட்ட ஆட்சியர் நாகராஜனை சந்தித்து நோயாளிகள் பயன்பெறும் வகையில் 25 ஆக்சிசன் செரிவூட்டிகளை வழங்கியுள்ளோம். இதை உடனடியாக நோயாளிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் வைத்துள்ளோம்.

அதேபோல, தொடர்ந்து கோவை மாவட்டத்தில் அதிமுக உறுப்பினர்களை குறிவைத்து திமுக அரசாங்கம் பொய் வழக்குகளை பதிவு செய்து வருகிறது. இது அரசியல் காழ்ப்புணர்ச்சி ஆன செயலாகும். பொய் வழக்குகளை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். பொய் வழக்கு போடப்பட்டவர்கள் மீது வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றார்.

மேலும், தமிழகத்திலேயே கோவை மாவட்டத்தில் அதிகமான கொரோனா நோயாளிகள் காணப்படுகின்றன. ஆதலால் போர்க்கால அடிப்படையில் கோவை மாவட்டத்திற்கு சிறப்பு கவனத்தில் எடுத்துக்கொண்டு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். தொடர்ந்து நாங்கள் பொது மக்களுக்காக மக்கள் பணி ஆற்றுவோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி தலைமையில் ஐ.ஜி. சுதாகர் அவர்களை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...