கோவையில் கிராமங்களில் திருமணம், இறப்பு நிகழ்வுகளில் அரசின் விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? கொரோனா கண்காணிப்பு குழு ஆய்வு!

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள 228 கிராமங்களிலும் கொரோனா நோய் தொற்று கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு கிராமங்களில் கூட்டம் கூடுவதையும், கல்யாணம், இறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் அரசின் வழிகாட்டு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்றும் தீவிரமாக கண்காணித்து வருகிறது.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள 228 கிராமங்களிலும் கொரோனா நோய் தொற்று கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு கிராமங்களில் கூட்டம் கூடுவதையும், கல்யாணம், இறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் அரசின் வழிகாட்டு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்றும் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள 228 கிராம ஊராட்சிகளில் கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி செயலாளர், கிராம நிர்வாக அலுவலர், கிராம சுகாதார செவிலியர் மற்றும் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளரால் நியமிக்கப்பட்ட காவலர்கள் ஆகியோரை உறுப்பினராக கொண்ட கொரோனா நோய் தொற்று கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வட்டார மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் குழு உறுப்பினர்களுடன் இணைந்து வீடு, வீடாகச் சென்று கொரோனா வைரஸ் தொற்று கணக்கெடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இக்குழு கிராம ஊராட்சி அளவில் கொரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்தி உள்ளது. 228 ஊராட்சிகளில் 3 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், "கொரோனா தொற்ற உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள முடியாதவர்கள் இந்த மையத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகின்றனர்.

இந்த சிகிச்சை மையத்திற்கு வருபவர்களுக்கு தேவையான உணவு வழங்கப்படுகிறது. கிராமங்களில் கூட்டம் கூடுவதை கண்காணிக்க தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். கல்யாணம், இறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் அரசின் வழிகாட்டு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்றும் கண்காணிக்கப்படுகிறது," என்றார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...