நீலகிரி: வண்டலூரில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, நீலகிரி மாவட்டம் முதுமலையில் வளர்ப்பு யானைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையில், வன விலங்குகளையும் தொற்று விட்டு வைக்க வில்லை. சமீபத்தில், வண்டலூர் உயிரியல் பூங்காவில், நீலா என்ற பெண் சிங்கம் கொரோனாவுக்கு பலியானது.
இதையடுத்து, வனத்துறை சார்பில், முதுமலை, டாப்சிலிப், சத்தியமங்கலம், களக்காடு உள்ளிட்ட புலிகள் காப்பகங்களில் உள்ள முகாம் யானைகளுக்கு கொரோனா மாதிரி பரிசோதனை கால்நடை மருத்துவக் குழு சார்பில் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நிலையில், முதற்கட்டமாக, முதுமலையில் உள்ள 28 யானைகளுக்கு மாதிரி கொரோனா பரிசோதனை நடைபெற்றது. சோதனையில் சேகரிக்கப்படும் மாதிரிகளை, போபாலில் உள்ள கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட உள்ளது.