கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே தாமரைகுளத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கயிறு திரிக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியில் பாரம்பரியமாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தென்னை நார் மூலம் கயிறு திரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாரக் கூலி அடிப்படையில் தொழில் செய்து வரும் கயிறு திரிக்கும் தொழிலாளர்கள் முழு ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக கயிறு திரிக்கும் தொழில் முடங்கி உள்ளது.
இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக கட்டுமான பணிகள் மற்றும் கட்டிட பொருட்கள் விற்பனை நிலையங்கள் மூடியிருப்பதால் கயிறு விற்பனை முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடந்த இரண்டு மாதங்களாக கயிறு திரிக்கும் பணியை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் இத்தொழிலை நம்பி உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.
மேலும், இத்தொழிலுக்கு வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த வற்புறுத்தி வருவதாகவும், இதனால் வங்கியில் வாங்கிய கடனை அரசு தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கயிறு திரிக்கும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
அதேபோல, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கயிறு திரிக்கும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.