வால்பாறை: வால்பாறை பகுதியில் காட்டுக்குள் இருந்து வீட்டுக்குள் வந்து புகுந்த காட்டு யானைகள் வீட்டின் ஜன்னல், கதவு போன்றவற்றை உடைத்து சுவரை இடித்து அட்டகாசம் செய்தன.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அய்யர் பாடி பாரளை எஸ்டேட்டில் குடியிருப்பு பகுதிக்குள் மூன்று காட்டு யானைகள் புகுந்தன. பின்னர் ஜான் டேவிட், இந்திரா, பழனியம்மாள் ஆகியோரது வீட்டின் கதவு ஜன்னலை உடைத்து சேதப்படுத்தின. அந்தக் காட்டு யானைகள், வீட்டின் ஜன்னல் கதவை உடைக்கும் சத்தத்தை கேட்ட அருகிலுள்ளவர்கள் ஒன்று சேர்ந்து காட்டு யானைகளை சத்தம் போட்டு விரட்டினர்.
அங்கிருந்து அகன்று சென்ற காட்டு யானைகள் அருகில் உள்ள ஆரம்பப் பள்ளி வளாகத்திற்குள் சென்றது. அங்கு உள்ள சத்துணவு கூடத்தின் ஜன்னலை உடைத்து சேதப்படுத்தியது. பின்னர் பள்ளியின் சுற்றுச்சுவரை இடித்துத் தள்ளியது. தேயிலைத் தோட்ட காவலர்கள் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
யானைகள் வனப்பகுதிக்கு செல்லாமல் அப்பகுதியில் முகாமிட்டு உள்ளதால், பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர். தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.