கோவை: மானியத்தை ஒரே தவணையில் வழங்க நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
"வங்கியில் கடன் கிடைக்க வாய்ப்பில்லாத குறுந் தொழில் முனைவோர்கள் தங்கள் கையில் உள்ள பணத்தை கொண்டு தனியார் நிதி நிறுவனங்களின் கடன் பெற்றும் இயந்திரம் வாங்கி வந்தனர்.
வாங்கும் இயந்திரத்தின் விலையில் 25 சதவிகதத்தை தமிழக அரசு மானியமாக வழங்கி வந்தது. அதனை பெறுவதற்கு மூன்று தவணையாக மூன்று ஆண்டுகள் காத்திருக்கும் சூழ்நிலை பல ஆண்டுகளாக இருந்து வந்தது.
குறுந்தொழில் முனைவோர் சங்கம் சார்பில் கடந்த 2016 ம் ஆண்டிலிருந்து அரசு வழங்கும் மானியத்தை ஒரே தவணையில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தோம்.
அந்த கோரிக்கையை தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றி தந்துள்ளார். தொழில் முனைவோர் சார்பில் அவருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.”
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.