சென்னை: கருப்பு பூஞ்சை மருந்துகள் வாங்க முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
“முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரையிலும் ரூ.280.20 கோடி அளித்திருக்கும் நன்கொடையாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இத்தொகையிலிருந்து COVID19 சிகிச்சைக்காக ஏற்கனவே ரூ.141.40 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், கருப்புப்பூஞ்சை சிகிச்சைக்கான மருந்துகள் வாங்க இப்போது ரூ.25 கோடி ஒதுக்கப்படுகிறது.
முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, கருப்புப் பூஞ்சை நோய் சிகிச்சைக்காக தேவைப்படும் ஆம்போடெரிசின் உள்ளிட்ட அனைத்து உயிர் காக்கும் மருந்துகளையும் வாங்குவதற்கு 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு கை கொடுக்க நிதி வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி இன்று (7-6-2021) வரை ரூ.280.20 கோடி நன்கொடையாக பெறப்பட்டுள்ளது.
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகள், கொரோனா நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என உறுதியளித்தவாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது.” இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.