கோவை சிங்காநல்லூர் பகுதியில் குடிபோதையில் பொதுமக்களை தாக்கும் ரவுடி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியில் ஒரு ரவுடி தினமும் குடித்துவிட்டு அந்த பகுதியில் உள்ள வீட்டின் மேல் கற்களை வீசுவது, பொதுமக்களை தாக்குவது போன்ற செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.


கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியில் ரவுடி ஒருவர் தினமும் குடித்துவிட்டு அந்த பகுதியில் உள்ள வீட்டின் மேல் கற்களை வீசுவது, பொதுமக்களை தாக்குவது போன்ற செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று குடிபோதையில் கையில் அரிவாளுடன் வீட்டு வாசலில் நின்று தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அதை அப்பகுதி மக்கள் வீடியோவாக பதிவு செய்து காவல் துறைக்கு அனுப்பி உள்ளன. இந்த ரவுடியின் அட்டகாசத்தால் அந்த பகுதியில் மக்கள் தொடர்ந்து பயத்துடனும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். போலீசார் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

கோவை மாநகரம் சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மசக்காளிபாளையம் அம்மா உணவகத்துக்கு எதிரே உள்ள முல்லை நகரில் வசித்துவரும் மணிகண்டன் என்பவர் பிரபல ரவுடி என்று கூறப்படுகிறது. இவர் இந்த பகுதியில் அவ்வப்போது குடிபோதையில் பயங்கர ஆயுதங்களுடன் தகராறு செய்து அங்கிருக்கும் வாகனங்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனை தட்டி கேட்ட பொழுது, கத்தி கற்களைக் கொண்டு கேட்டை உடைத்துக் கொண்டு காக்க முயற்சி செய்து வருகிறார். இதனால் செய்வதறியாது வீட்டிற்கு உள்ளேயே பயந்து செய்வதறியாது நின்று கொண்டிருக்கின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ளவர்கள் இவரது அடாவடித்தனத்தைப் பார்த்து பயந்து வீட்டிற்குள் சென்று விட்டனர். இதுபோன்ற நபர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் இவரது நடவடிக்கையால் இப்பகுதியில் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை உள்ளது என்று தெரிவித்தனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...