கோவை: கோவையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 27,000 லிருந்து 23 ஆயிரமாக குறைந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.80 லட்சத்தை கடந்து விட்டது. இதில் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து விட்டனர்.
கோவையில் தினசரி பாதிப்பு 3000 என்ற எண்ணிக்கையில் இருந்து 2600 ஆக குறைந்து வருகிறது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுதவிர மாவட்டத்தில் உள்ள 50 க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கோவை மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் அறிகுறி இன்றி தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள சுகாதாரத் துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோவை மாவட்டத்தில் கடந்த வாரங்களில் 27 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப் படுத்தப் பட்டனர். தற்போது அறிகுறி இன்றி தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 251 ஆக உள்ளது," என்றார்.