கோவை: கோவையில் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் அதிகக் கட்டணம் வசூல் செய்து, தொடரும் கொள்ளை குறித்து எழுந்த புகாரின் அடிப்படையில், மேலும் ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்க கலெக்டர் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்..!

கோவையில் தனியார் மருத்துவமனைகளையும் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றி அரசு உத்தரவுப்படி சிகிச்சை அளித்து வரப்படுகின்றன. அதில், கோவையில் பல்வேறு தனியார் மருத்துவமனைகள் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்திற்கு மேலாக 10 லட்சம் 15 லட்சம் 20 லட்சம் என கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால், இதுவரை தொடர்ந்து வந்த புகாரின் காரணமாக நான்கு மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இப்பொழுது சிட்ரா பகுதியில் உள்ள மேலும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை சிட்ரா பகுதியைச் சேர்ந்தவர் மோகன்குமார்(54). கொரோனா தொற்று பாதிக்கபட்ட இவர் சுங்கம் புறவழி சாலையில் உள்ள மனு மருத்துவமனையில் கடந்த 29ஆம் தேதி அனுமதிக்கபட்டார். அப்போது முதல் நாள் சிகிச்சை கட்டணமாக 60,000 ரூபாய் வசூலித்த மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சை பெறும் ஒவ்வொரு நாட்களுக்கும் 40,000 ரூபாய் வசூலிக்கபடும் என தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த மோகன்குமார் நிர்ணயம் செய்யபட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கபட்டதாகக் குற்றம் சாட்டி உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி, அவரது சகோதரர் மகாலிங்கம் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் கேட்டபோது, அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தவரின் ஆவணங்களை பார்த்த பின்னரே இதுகுறித்து சொல்ல முடியும் என தெரிவித்தனர். கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் இதே மருத்துவமனை மீது புகார் அளிக்கபட்டு உள்ளது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மேலும் ஒரு புகார் எழுந்துள்ளது.
இதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன் சரவணம்பட்டி பகுதியில் உள்ள முத்தூஸ் மருத்துவமனை அதிகக் கட்டணம் வசூல் செய்வதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து கொரோனா சிகிச்சை அளிப்பதற்கான உரிமம் ரத்து செய்யபட்டது. இந்தநிலையில், உயர் நீதிமன்றத்தில் அதிகக் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் உரிமம் ரத்து செய்யபடும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இன்று கோவை மாநகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, தனியார் மருத்துவமனைகள் அதிகக் கட்டணம் வசூலிப்பதாக வந்த புகார்களைத் தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வுக்குப் பின்னர், தற்போது அதிகக் கட்டணங்கள் பெறுவது குறைந்து உள்ளதாக மாவட்ட ஆட்சியர் நாகராஜன் தெரிவித்துள்ளதாகவும் இருப்பினும் புகார்கள் வரும் பட்சத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தார். ஏற்கெனவே புகாருக்கு உள்ளான மனு மருத்துவமனை மீது விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மேலும் ஒரு புகார் எழுந்துள்ளது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.