கோவை: கோவையில் அதிக பணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமத்தைத் தடை செய்வது மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தைத் திருப்பி வாங்கித் தர வேண்டும் என்று பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கோவையில் அதிக பணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமத்தைத் தடை செய்வது மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தைத் திருப்பி வாங்கித் தர வேண்டும் என்று பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் கொரோனா பெருந்தொற்று பாதிக்கப்பட்ட மக்களிடம் அதிகக் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளுக்கு எதிராக பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பாமகவைச் சேர்ந்த அசோக் ஸ்ரீநிதி, ‘‘கொரோனா சிகிச்சைக்கு அதிகக் கட்டணம் வசூலித்த மருத்துவமனைகளிடம் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை திருப்பி வாங்கித் தர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
தனியார் மருத்துவமனைகளிடம் சிகிச்சைக்காக அதிகப் பணத்தை இழந்ததோடு, உயிரிழப்பையும் சந்தித்த பல்வேறு பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து புகார்களைப் பெற்று ஒருங்கிணைத்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் கிராம சுகாதார சேவை) ஆகியோரை இரண்டு முறை பார்த்து, பாமக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இதன் காரணமாக நான்கு பேர் கொண்ட குழுவை மாவட்ட ஆட்சியர் நேற்று அமைத்துள்ளார்.
எங்கள் நோக்கம் அதிக பணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமத்தை தடை செய்வது மட்டுமல்ல. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை திருப்பி வாங்கித் தர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். எனவே, இதற்கான நல்ல தீர்வு கிட்டும்வரை போராட்டம் தொடரும்'' என்றார்.