கோவை: கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள கற்பகம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் இன்று பணிகளை புறக்கணித்து மருத்துவகல்லூரி வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை: கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள கற்பகம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் இன்று பணிகளை புறக்கணித்து மருத்துவகல்லூரி வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரக்கூடிய சூழலில், நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு துரிதமாக சிகிச்சை அளித்துவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்களின் சேவை வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவையில் உள்ள கற்பகம் மருத்துவக் கல்லூரியில் படித்து முடித்த ஹவுஸ் சர்ஜன்கள், கல்லூரி நிர்வாகம் தங்களுக்கு தங்குமிடம் மற்றும், உணவுக்கு வழிவகை செய்யாமல், உதவித் தொகை என ரூ 2,500 மட்டும் வழங்குவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
பேரிடர் காலத்தில் கல்லூரியின் செயல்பாட்டால், ஆத்திரமடைந்த பயிற்சி மருத்துவர்கள், கோரிக்கைகள் அடங்கிய பாதாகைகளை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை உரிமை தொகையாக கொடுக்கப்பட்டு வரும் நிலையில் தங்களுக்கும் உரிமை தொகையினை அதிகப்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தினர்.
உரிமை தொகை அதிகரித்து தருவதுடன் தங்குமிடம், உணவு போன்ற வசதிகளையும், நிர்வாகம் ஏற்படுத்தி தர வேண்டும் என தெரிவித்துள்ள பயிற்சி மருத்துவர்கள், தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை பணிபுறக்கணிப்பில் ஈடுபட போவதாக கூறியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பயிற்சி மருத்துவர்களுடன் பேச்சுவார்ர்தை நடத்திய கல்லூரி நிர்வாகம், இரு தினங்களில் உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதை ஏற்க மறுத்த பயிற்சி மருத்துவர்கள் மருத்துவமனை வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.