கோவை: கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, மற்ற 9 தீயணைப்பு வீரர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் தீயணைப்பு வீரர்களின் குடும்பத்திலும் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, தீயணைப்பு படை வீரர்கள் காரமடை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு நிலையத்தை 5 நாட்கள் மூட அன்னூர் சுகாதார மேற்பார்வையாளர் கண்ணப்பன் உத்தரவிட்டார்.
தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் தீயணைப்பு நிலையத்தைச் சுற்றி கிருமிநாசினி தெளித்தனர். அன்னூர் தீயணைப்பு நிலையம் தற்காலிகமாக செயல்படுவதற்கு மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 4 தீயணைப்பு வீரர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும், தீயணைப்பு நிலைய வாகனங்கள் தீயணைப்பு நிலையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டு பணிக்கு தயாராக உள்ளது.