கர்நாடகா மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்டு லாரி மூலம் விற்பனை செய்யப்பட்ட ரூ.2.74 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் - லாரி ஓட்டுநர் கைது!

கோவை: சூலூர் அருகே கர்நாடகா மாநிலத்திலிருந்து லாரி மூலம் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த ரூ.2.74 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், லாரிய ஓட்டுனரை கைது செய்தனர்.


கோவை: சூலூர் அருகே கர்நாடகா மாநிலத்திலிருந்து லாரி மூலம் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த ரூ.2.74 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், லாரிய ஓட்டுனரை கைது செய்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள முத்துகவுண்டன்புதூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இந்த தகவலையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, முத்துகவுண்டன் புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனி அருகே நின்று கொண்டிருந்த லாரியின் அருகில் கூட்டமாக இருப்பதை கண்டு காவல்துறை அங்கு சென்றுள்ளனர். அப்போது, கூட்டமாக நின்று கொண்டிருந்தவர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர்.

இதனையடுத்து, லாரி ஓட்டுனரிடம் விசாரிக்கையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, லாரி ஓட்டுநரை சூலூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், தென்காசி பகுதியை சேர்ந்த காந்தி (34) என்பதும், கர்நாடக மாநிலத்தில் இருந்து ஈச்சர் வாகனம் மூலம் மதுபாட்டில்கள் கடத்தி வந்து சூலூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.



மேலும், முன்னதாக வரும் வழியில் மது பாட்டில்கள் விற்பனை செய்ததும் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, லாரி ஓட்டுநர் காந்தி மீது வழக்குப்பதிவு செய்த சூலூர் போலீசார், அவரிடம் இருந்த இரண்டு லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள உயர்ரக மதுவகை பாட்டில்கள் மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...