கோவை: கோவை அரசு மருத்துவமனை கொரோனா வார்டு அருகில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக அமர்ந்து மாவட்ட ஆட்சியர் நாகராஜன் ஊழியர்களின் செயல்பாடுகளை கண்காணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பெரும் தொற்று பரவலில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கோவை முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, கோவை மாவட்டத்தில் தொற்று பரவல் அதிகமாக இருக்கும் நிலையில், தொற்றை கட்டுக்குள் கொண்டு வர கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன், மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் ஆகியோருடன் கூடுதலாக ஐஏஎஸ் அதிகாரிகள் சித்திக், வீரராகவராவ் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, நேற்று (ஜூன் 6) மாலை 5 மணி அளவில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டுக்கு வந்த மாவட்ட ஆட்சியர் நாகராஜன், அங்கிருந்த ஆக்சிஜன் படுக்கை வசதிகளை நேரில் ஆய்வு செய்தார்.