கோவை: தமிழகத்தின் 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கு நீடித்துள்ள நிலையில் ஒரு சில தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், கோவையில் சாலையோர வியாபாரிகளின் சிற்றுண்டி கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்..!

தமிழகம் முழுவதும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கபட்டுள்ளன. இதில் கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், கொரோனா பரவல் அதிகம் உள்ள காரணங்களால் தளர்வுகளுடன் கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த 11 மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் ஹார்டுவேர்ஸ் கடைகள், ஆட்டோ மொபைல் கடைகள் போன்றவைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மளிகைக்கடை, இறைச்சி கடை, உணவகங்கள், காய்கறி கடைகள், பழக்கடைகள் மற்றும் அத்தியாவசிய தேவைகள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதில் சாலையோர வியாபாரிகளுக்கு காய்கறி மற்றும் பழக்கடைகள் வைக்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கோவை மாவட்ட சாலையோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் நலச்சங்கம் தலைவர் மணி கூறியதாவது:
‘‘கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 12 ஆயரத்திற்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் உள்ளனர். மாவட்டம் முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் காய்கறி வியாபாரம், துளசி வியாபாரம், பழங்கள் மற்றும் சிற்றுண்டி வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர்கள். கொரோனா பரவல்
முழு ஊரடங்கு காரணமாக சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதனிடையே தற்போது காய்கறிகள், பழங்கள் விற்பனை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் சிற்றுண்டி செயல்படவும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வியாபாரம் மேற்கொள்ளப்படும்'' என்று கூறினார்.