கோவை: கோவை மாநகராட்சி ஆய்வுக் கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் தலைமையில் பெரும் தொற்றுநோய் தடுப்பது குறித்தும், கோவை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்ற தொகுப்பூதிய அடிப்படையில் ரூ12 ஆயிரம் ஊதியத்தில், 100 செவிலியர்களுக்கான பணிநியமன ஆணையை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்க உள்ளார்.
மேலும், மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பெருந்துறை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். இதைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி கலையரங்கில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு பிரிவு கட்டுப்பாட்டு அறையை ஆய்வு மேற்கொண்டு மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆலோசனையும் அறிவுரையும் வழங்க உள்ளார்.
இந்த கூட்டத்தில் உணவுத்துத்துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் இராமச்சந்திரன், பெரும் புற்றுநோய் சிறப்பு அதிகாரிகள் சித்திக், முதன்மைச் செயலாளர் ஜெகநாதன், நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர்கள், கோவை எம்பி பிஆர்.நடராஜன், நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குநர் சிவதாஸ் மீனா, மாவட்ட ஆட்சியர் நாகராஜ், மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன், மற்றும் மாநகராட்சி மாவட்ட அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.