திருப்பூரில் 10 சதவீத பணியாளர்களுடன் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் துவக்கம் - விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர்!

திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் 10 சதவீத பணியாளர்களுடன் உற்பத்தியை துவங்கியுள்ள நிலையில், விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் 10 சதவீத பணியாளர்களுடன் உற்பத்தியை துவங்கியுள்ள நிலையில், விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் மூலம் ஆண்டுக்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் ரூ.10 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். தொழிலாளர்கள் அதிக அளவில் பணியாற்றி வருவதால் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஊரடங்கில் செயல்பட தடை விதிக்கப்பட்டது.

இதன் காரணமாக கடந்த 15 நாட்களாக பின்னலாடை நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் வெளிநாட்டு வணிகர்களிடம் நம்பிக்கை இன்மை ஏற்படுவதாகவும் ஆர்டர்கள் பிற நாடுகளுக்குச் சென்றால் தொழில் துறை கடுமையான வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் என ஏற்றுமதியாளர்கள் அச்சமடைந்தனர்.

இதனிடையே, பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து, அறிவிக்கப்பட்ட தளர்வில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள், மற்றும் அவற்றிற்கு இடுபொருள் வழங்கும் நிறுவனங்கள் 10 சதவீத பணியாளர்களுடன் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று முதல் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர். தொழிலாளர்கள் பணிக்கு வரும் போது அவர்களுக்கு உப்பு மஞ்சள் கலந்த நீரில் வாய் கொப்பளிக்க வைத்து தேங்காய் எண்ணெய் மூக்கில் தடவியும், வெப்ப பரிசோதனை மற்றும் சானிடைசர் கொடுத்து உள்ளே அனுமதிக்கின்றனர். 10 சதவீத பணியாளர்கள் மட்டுமே அனுமதி என்பதால் தொழிலாளர்களுக்கு சுழற்சி முறையில் பணி வழங்கப்படும் என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் வெளியிட்ட அறிவிப்பில், ஏற்றுமதி நிறுவனங்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்குகிறதா என கண்காணிக்க சார் ஆட்சியர் மற்றும் நிலை அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் எனவும் விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...