கோவையில் கலைஞரின் 98 வது பிறந்த நாளை முன்னிட்டு கொரோனா கால உதவியாக காலை உணவு வழங்கல்..!

கோவை: கோவையில் கொரோனா பெருந்தொற்றுத் தடுப்பு நிவாரணமாக முத்தமிழறிஞர், செம்மொழிக் காவலர் கலைஞரின் 98வது பிறந்த நாளை முன்னிட்டு, பொதுமக்கள் 700 பேருக்கு திமுகவினரால் காலை உணவு வழங்கப்பட்டது.


கோவை: கோவையில் கொரோனா பெருந்தொற்றுத் தடுப்பு நிவாரணமாக முத்தமிழறிஞர், செம்மொழிக் காவலர் கலைஞரின் 98வது பிறந்த நாளை முன்னிட்டு, பொதுமக்கள் 700 பேருக்கு திமுகவினரால் காலை உணவு வழங்கப்பட்டது.



கோவை மாநகர் கிழக்கு மாவட்டம், பீளமேடு பகுதிக்கழகம்-3, 57 வது வட்டக்கழகம், மசக்காளிபாளையம், காந்திநகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கலந்து கொண்டு, கழகக் கொடியை ஏற்றி வைத்து, முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிய பின்னர், கொரோனா பெருந்தொற்று நோய்த்தடுப்பு நிவாரண உதவியாக பொதுமக்கள் 700 பேருக்கு காலை உணவு வழங்கினார்.

உடன் மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பி.மாரிச்செல்வன், மா.செல்வராஜ், பீளமேடு பகுதிக்கழகம்-3 பொறுப்பாளர் இரா.சேரலாதன், 57வது வட்டக்கழகப் பொறுப்பாளர் மா.சிவக்குமரன், 57(ஆ) வட்டக்கழகப் பொறுப்பாளர் சு.தனபால், 57(அ) வட்டக்கழகப் பொறுப்பாளர் மில் தண்டபாணி, இரா.செந்தில், மகேந்திரமணி, எஸ்.கருணாகரன், கிருஷ்ணமூர்த்தி, சொக்கலிங்கம், இளைஞரணி சுபாஷ், திலக்பாபு, ராஜன், ரங்கனாதன், ஜோதி, நாகராஜ், ஜான், சிட்டிபாபு, பக்தவச்சலம், கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகளுடன் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...