திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், அனைத்து மளிகை, காய்கறி கடைகளும் திறக்கப்பட்டது.

கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு தொடரும் நிலையில், கட்டுப்பாடுகளுடன் கூடிய சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளதை தொடர்ந்து, திருப்பூர் மாவட்டத்தில் மளிகை, இறைச்சி உள்ளிட்ட கடைகள் காலையிலேயே திறக்கப்பட்டு வியாபாரம் நடந்து வருகிறது.
குறிப்பாக, திருப்பூர் தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகள் அதிகளவில் கடைகள் வைத்து இருந்தனர். கடந்த இரண்டு வார காலத்திற்கு மேலாக மூடப்பட்டிருந்த அனைத்து மொத்தம் மற்றும் சில்லறை மளிகை கடைகள் திறக்கப்பட்டது.

இதன் காரணமாக காலை முதலே பொதுமக்கள் காய்கறி கடைகளிலும், மளிகை கடைகளிலும் பொருட்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும் சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர்.
மேலும், கொரோனா தொற்றின் தீவிரத்தை மக்கள் உணர்ந்து உள்ளதால் சாலைகளில் குறைவான அளவிலேயே வாகனங்களின் இயக்கத்தை காணமுடிந்தது.