கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உலாந்தி வனச்சரகத்தில் உள்ள டாப்சிலிப் மற்றும் கோழிகமுத்தி மலைவாழ் மக்கள் குடியிருப்பில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனக்கோட்டத்தில், வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, உலாந்தி ஆகிய நான்கு வனச்சரகங்கள் உள்ளன. இங்கு சுமார் 17 மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. இதில் உலாந்தி சரகத்திற்கு உட்பட்ட, டாப்சிலிப் மற்றும் கோழிகமுத்தி மலைவாழ் மக்கள் குடியிருப்பில், வனத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சார்பில் மலைவாழ் மக்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றன.

இதில் நேற்று முன்தினம் கோழிகமுத்தி யானை முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளை பராமரித்து வரும் யானை பாகன்கள் மற்றும் மாவுத் உள்ளிட்ட 35 பேருக்கு நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதைத்தொடர்ந்து, நேற்று கோழிகமுத்தி மற்றும் டாப்ஸ்லிப் பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்கள் 57 பேருக்கு கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் குடியிருப்பு பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களுக்கு நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.