கொரோனா ஊரடங்குக் காலத்தில் பேரூராதீனம் 25ஆம் குருமகாசந்நிதானத்தின் சமுதாயப்பணி..!

கோவை: கொரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக பேரூராதீனம் 25ஆம் குருமகாசந்நிதானங்கள் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களின் வழிகாட்டுதலில் ஊரடங்குக் காலத்தில் சமுதாயப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கோவை: கொரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக பேரூராதீனம் 25ஆம் குருமகாசந்நிதானங்கள் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களின் வழிகாட்டுதலில் ஊரடங்குக் காலத்தில் சமுதாயப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பேரூராதீனம் 25ஆம் குருமகாசந்நிதானங்கள் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களின் வழிகாட்டுதலில் ஊரடங்குக் காலத்தில் பொதுமக்களுக்கான சமுதாயப்பணியாக, பேரூராதீனத்தில் உணவுகள் தயாரிக்கப்பட்டு அன்பர்களின் மூலமாக சாடிவயல் பதி, சர்க்கார் போரத்தி, சர்க்கார்ப்பதி, கல்கொத்திப்பதி, சீங்கப்பதி, வெள்ளப்பதி, ஒட்டப்பதி, கரடிமடை அன்பு இல்லம், மாதம்பட்டி, தொண்டாமுத்தூர், கோவைப்புதூர், ஆர்.எஸ்.புரம் பகுதியில் அடைக்கப்பட்ட குடியிருப்புப் பகுதி, மத்துவராயபுரத்தில் தொம்பிலிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் 500 பேருக்கு தொடர்ந்து ஒரு மாதகாலமாக மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் கபசுரப்பொடி, வள்ளலார் ஐங்கூட்டு, சூரக்கசாயம் உள்ளிட்ட மருந்துகளும் தேவைப்படும் மக்களுக்கு நாள்தோறும் நேரிலும் அஞ்சலிலும் வழங்கப்பட்டு வருகிறது.

உணவு மற்றும் கபசுரப்பொடி உள்ளிட்ட மருந்துகள் தேவைப்படுவோர் பேரூராதீனத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.

தொடர்புக்கு:

செந்தில் - +91 99450 21400

சுரேஸ் - +91 90610 89405

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...