கோவை: வால்பாறையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மளிகை, காய்கறி, பூ மற்றும் பழக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழகத்தில் கொரோனா பெரும் தொற்று அதிகரித்து வருவதால் தொற்றை குறைக்க தமிழக அரசு முழு ஊரடங்கை 10ம் தேதி முதல் அறிவித்திருந்தது. தற்போது, தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், 23 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அளித்து மேலும் ஒரு வாரம் ஊரடங்கு அறிவித்துள்ளது.

இதில் தொற்று குறையாத 11 மாவட்டங்களில் மளிகை, காய்கறி, பழம், பூ கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் 5 மணி வரை திறக்க தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதனால் இன்று முதல் கோவை மாவட்டங்களில் அத்தியாவசிய கடைகள் திறக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இன்று வால்பாறை பகுதியில் காலை 6 மணி முதல் மளிகை காய்கறி பழம் கடை பூ கடைகள் திறந்து வியாபாரங்கள் நடைபெறுகிறது. இதை தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

சுமார் 2 வாரங்களுக்குப் பிறகு கடைகள் திறக்கப்பட்டு உள்ளதால் மக்கள் கூட்டம் கூட்டமாக அத்தியாவசிய பொருட்கள் வாங்க குவிந்து வருகின்றனர்.