பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள பெத்தநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர்களான சரவணகுமார் மற்றும் சின்னதுரை இருவரும் கோவை அருகே உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்த இரண்டு 15 வயது சிறுமிகளுக்கு வன்கொடுமை செய்த குற்றத்திற்காக அவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள பெத்தநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார்(28) அவரது உறவினர் சின்னதுரை (30)இருவரும் கோவை அருகே உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தனர். அப்போது அங்கு அவருடன் பணியாற்றிய இரண்டு 15 வயது சிறுமிகளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்தநிலையில், நேற்று சிறுமிகளைக் காணவில்லை என்று பெற்றோர் பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த சரவணகுமார் மற்றும் சின்னதுரை ஆகிய இருவரையும் கைது செய்து சிறுமிகளை மீட்டனர்.
பின்னர், சிறுமிகளிடம் நடத்திய விசாரணையில் ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட இருவர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து,
கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளை மகளிர் போலீஸார் மேற்கொண்டனர்.