கோவை: தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவித்துள்ள நிலையில் பொள்ளாச்சியில் அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகள் திறக்கப்பட்டது.

தமிழகத்தில் நோய் பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், அரசு ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி கடைவீதி, சத்திரம் வீதி, மார்க்கெட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில், காய்கறி, மளிகைப் பொருட்களை விற்கும் அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் திறக்கப்பட்டுள்ளன.
சுமார் 15 நாட்களுக்குப் பிறகு கடைகள் திறக்கப்பட்டு உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இருப்பினும் நோய் பரவலை தடுக்கும் வகையில், மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க வியாபாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் நோய் கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், நோய் கட்டுப்பாட்டு விதிகளை மீறும் பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதாரத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.