கோவை: கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மதிய உணவு திட்டத்தை துவக்கி வைத்தார்.
கோவை: கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மதிய உணவு திட்டத்தை துவக்கி வைத்தார்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வரும் நோயாளிகளுக்கும், அவர்களது உதவியாளர்கள், மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவுகளை எஸ்.பி.வேலுமணி வழங்கினார். மேலும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி, முககவசங்களையும் வழங்கினார்.
அதனை தொடர்ந்து தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணிகளையும் துவக்கி வைத்தார்.

மக்கள் தங்களை நோயின் பிடியில் இருந்து தற்காத்துக்கொள்ளும் விதமாக அனைத்து வீடுகளுக்கும், நோயெதிர்ப்பு சத்து மாத்திரைகளையும், முககவசங்கள், கபசுர குடிநீர் பொடி ஆகியவற்றை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.