கோவை: பொள்ளாச்சி அடுத்த கோமங்களம் பகுதியில் குட்டையில் மண் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீசார் JCB உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.

பொள்ளாச்சி மண்டல துணை தாசில்தார் சரவணன் தலைமையில் வருவாய்த்துறை, காவல்துறையினர் உள்ளிட்ட கொரோனா தடுப்பு குழுவினர் பொள்ளாச்சி அருகே கோமங்கலம் - சங்கம்பாளையம் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அரசுக்கு சொந்தமான புறம்போக்கு பகுதியில் அமைந்துள்ள முள்ளிமடை குட்டையில் ஜேசிபி மற்றும் டிராக்டர் வாகனங்கள் மூலம் ஒரு கும்பல் கிராவல் மண் அள்ளிக் கொண்டிருந்தனர்.
இதை பார்த்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரித்தபோது உரிய அனுமதி இல்லாமல் மண் அள்ளியது தெரியவந்தது. இதனையடுத்து, கோமங்கலம் காவல் நிலையத்தில் அதிகாரிகள் கொடுத்த புகாரையடுத்து மண் திருட்டில் ஈடுபட்ட சீலக்காம்பட்டியை சேர்ந்த அருண்குமார், கனகராஜ், பாஸ்கரன், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், மண் அள்ளுவதற்கு பயன்படுத்திய ஜே சி பி இயந்திரம் மற்றும் 2 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். மேலும், சட்டவிரோதமாக மண் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவிநாசி கிளை சிறையில் அடைத்தனர்.