கொரோனா முதல் அலையில் பணியமர்த்தப்பட்ட ஆயுர்வேத மருத்துவர்கள் பணிக்காலம் நீட்டிப்பு - அமைச்சர் மா.சுப்ரமணியம் தகவல்!

கோவை: கொரோனா நோய்த்தொற்று முதல் அலையின் போது பணியமர்த்தப்பட்ட ஆயுர்வேத மருத்துவர்கள் பணி நீடிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தேவையென்றால் கூடுதலாக மருத்துவர்கள் பணியமர்த்தப்படுவர் என்று அமைச்சர் மா. மா.சுப்ரமணியம் தெரிவித்தார்.


கோவை: கொரோனா நோய்த்தொற்று முதல் அலையின் போது பணியமர்த்தப்பட்ட ஆயுர்வேத மருத்துவர்கள் பணி நீடீப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தேவையென்றால் கூடுதலாக மருத்துவர்கள் பணியமர்த்தப்படுவர் என்று அமைச்சர் மா. மா.சுப்ரமணியம் தெரிவித்தார்.

குன்னூர் பாஸ்டியர் ஆய்வகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்குப் பின் அமைச்சர் மா.சுப்ரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்ரமணியம் குன்னூரில் வெறிநாய்கடி மருந்து தயாரிக்கும் பாஸ்டியர் ஆய்வகத்தில் கரோனா தடுப்பூசிகளை தயாரிக்க முடியுமா என்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அவருடன் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அப்போது அமைச்சர் பேசும் போது, கொரோனா முதல் அலையின் போது பணியமர்த்தப்பட்ட ஆயுர் வேத மருத்துவர்கள் பணி நீடிப்பு செய்யப்பட்டுள்ளது எனவும் தேவையென்றால் கூடுதலாக மருத்துவர்கள் என்றார்.



மேலும், ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவ சிகிச்சையில் உலகம் போற்றும் அளவிற்கு தமிழகம் திகழ்வதால் ஆந்திரா மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு ஆயுர்வேத மருந்திற்குத் தேவை இருக்காது என்றார்.

பின்னர் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் பேசும் போது, விதிமுறைகள் மீறும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விதிமுறைகள் மீறிய 40 மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலித்த 5 ஆர்டிபிசிஆர், மற்றும் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தாத 19 மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், கூடுதல் கட்டணம் வசூலித்த இரண்டு ஆம்புலேன்ஸ் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை. போதுமான அளவு உள்ளது. தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 921 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கருப்பு பூஞ்சை நோய் மருந்து 30,000 அளவில் தேவை. மத்திய அரசிடம் கேட்டிருக்கிறோம். 1790 மருந்து வந்துள்ளது. அதை தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு அளித்து வருகிறோம் என்று கூறினார்.



சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து அரசு கல்லூரி மருத்துவமனைகளிலும் சிகிச்சைப் பிரிவுகள் ஏற்படுத்தப்படும். கருப்பு பூஞ்சை நோய்க்கான மாற்று மருந்து மற்றும் மாற்று சிகிச்சை முறைகளை கண்டறிய 13 மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினரின் அறிக்கை வந்தவுடன் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றார்.

மேலும், சித்தா, ஆயுர்வேதம் ஆகிய இந்திய மருத்துவ முறை சிகிச்சை மையங்கள் கடந்த ஒரு மாத காலத்தில் 62 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாணியம்பாடியில் யுனானி சிகிச்சை திறந்து வைக்கப்பட்டது. அலோபதியுடன் சேர்த்து சித்தா, யுனானி உட்பட அனைத்து மருத்துவத்தையும் ஊக்கப்படுத்தும் அரசாக உள்ளது. குன்னூர் பாஸ்டியர் ஆய்வகத்தில் தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்ய முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...