கோவை: வால்பாறையில் சாலையில் அடிக்கடி சுற்றி திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: வால்பாறையில் சாலையில் அடிக்கடி சுற்றித் திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
வால்பாறையில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, வங்கி மற்றும் நியாயவிலைக்கடைகள் பால் மருந்தகங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை காரணம் காட்டி பொதுமக்கள் ஏராளமானோர் வால்பாறை நகரில் சுற்றிய வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் காவல்துறையில் சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, சாலைகளில் வரும் வாகனங்களின் எண்களை பதிவு செய்து கொள்கின்றனர். தேவையின்றி வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வைக்கின்றனர். மீண்டும் வரும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மேலும், சாலைகளில் அனாவசியமாக நடப்பவர்களை கண்டித்து திருப்பி அனுப்பி வைக்கின்றனர். இருப்பினும் காவல்துறையின் எச்சரிக்கையை மதிக்காமல் தொடர்ந்து சாலையில் சுற்றித்திரிந்த 13 பேர் கொரோனா பரிசோதனைக்காக வால்பாறை அரசு கல்லூரியில் உள்ள கொரோனா கேர் சென்டருக்கு அனுப்பி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.