கோவை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், கோவை புறநகர் பகுதிகளில் விதி மீறல்களில் ஈடுபட்ட 10,000 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து 2500 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பேட்டியில் தெரிவித்தார்.

பொள்ளாச்சியில் காவல்துறை மற்றும் ஊர்க்காவல் படை பணியாளர்களுக்கும் கொரோனா நோய் தடுப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கோவை மாவட்ட காவல்துறை செல்வ நாகரத்தினம் காவல்துறையினருக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து, பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், '+தமிழகத்தில் மே மாதம் 10ம் தேதி முழு ஊரடங்கு தொடங்கிய பிறகு, கோவை மாவட்டம் புறநகர் பகுதிகளில் இதுவரை நோய்த்தொற்று விதிமுறைகளை மீறியதாக சுமார் 3 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேபோல, மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 10 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 2000 இருசக்கர வாகனங்கள் மற்றும் 500 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா இரண்டாம் அலை தொடங்கிய பிறகு கோவை மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்தநிலையில், கட்டுப்பாடு விதிகளை அதிகப்படுத்தியதைத் தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஊரடங்கு நேரத்தில் சட்டவிரோதமாக மது பாட்டில்களைப் பதுக்கி விற்பனை செய்பவர்களைத் தொடர்ந்து கைது செய்து தினந்தோறும் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. விற்பனை செய்த நபர்கள் மீதும் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது பொதுமக்கள் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம். கோவை மாவட்டம் தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ளதால், கேரளாவிலிருந்து கோவை மாவட்டம் வழியாக தமிழகம் வரும் நபர்களுக்கு இ-பாஸ் முறை நடைமுறையில் உள்ளது. இதேபோல மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கொரோனா பரிசோதனை சான்று இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக எல்லைப் பகுதிகளில் வருவாய்த்துறை காவல் துறை சுகாதாரத்துறை அடங்கிய சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது'' என்று தெரிவித்தார்.