கோவை: கொரோனா பெருந்தொற்று நடவடிக்கையாக தமிழக அரசு அமல்படுத்திய முழு ஊரடங்கையொட்டி காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால் வால்பாறையில் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

வால்பாறையில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக வங்கி மற்றும் நியாயவிலைக் கடைகள் பால் மருந்தகங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதைக் காரணம்காட்டி, பொதுமக்கள் ஏராளமானோர் வால்பாறை நகரில் சுற்றிய வண்ணம் உள்ளனர். இந்தநிலையில், வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் காவல்துறையினர் சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் வாகனங்களின் எண்களை பதிவு செய்து கொள்கின்றனர்.

தேவையின்றி வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வைக்கின்றனர். மீண்டும் வரும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் சாலைகளில் அநாவசியமாக சுற்றுபவர்களைக் கண்டித்து திருப்பி அனுப்பி வைக்கின்றனர். இதன் காரணமாக வால்பாறையில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.