கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதைத் தொடர்ந்து பரிசோதனை 9 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த மாதம் தினசரி கொரோனா தொற்று புதிய உச்சமாக 4,700 பேருக்கு ஏற்பட்டது. இதையடுத்து முழு ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவது தடுக்கப்பட்டது. இதனால், கொரோனா பரவல் மாவட்டத்தில் குறைந்து வருகிறது.
கோவையில் கடந்த 3 நாட்களில் 8,851 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால், அதே நேரத்தில் 13,624 பேர் 3 நாட்களில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன்மூலம் புதிய தொற்று எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் காலி படுக்கைகள் அதிகரித்து வருகின்றன.
கோவையில் கடந்த ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்த போது தினசரி 12 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் ஒரு சில நாட்கள் மட்டும் 13 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது இந்த தினசரி பரிசோதனை 9 ஆயிரமாகக் குறைந்து உள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியபோது,
'முழு ஊரடங்கு பலனாக கோவையில் தற்போது தினசரி கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதன்காரணமாக கொரோனா பரிசோதனை தினசரி 8 ஆயிரம் பேர் முதல் 9 ஆயிரம் பேர் என குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் கோவையில் கொரோனா பரவல் 40 சதவிகிதத்திற்கும் அதிகமாக காணப்பட்டது. தற்போது 25 சதவிகிதமாகக் குறைந்து உள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த சதவிகிதம் குறையும் என்று எதிர்பார்க்கிறோம்.' என்று தெரிவித்தார்.