கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சிங்கையன்புதூர் கிராம மக்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வழங்கி பாஜக நிர்வாகி உதவிக்கரம் நீட்டினார்.

கொரோனா தொற்று இரண்டாம் அலை பாதிப்பு அதிகரித்து வந்ததால், தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. முழு ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகள் மூடபட்டுள்ளதால் மக்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருவதால் வருமானம் இன்றி இருந்து வருகின்றனர்.
இந்தநிலையில், கிணத்துக்கடவு அருகேயுள்ள சிங்கையன்புதூர் கிராமத்தில் வசிக்கும் கூலித்தொழிலாளர் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் முழு ஊரடங்கால் வேலையின்றி அவதிபட்டு வருகின்றனர்.

வருமானம் இன்றி அவதிப்படும் கிராம மக்களுக்கு உதவி செய்யும் வகையில், அப்பகுதியைச் சேர்ந்த கோவை தெற்கு மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் சிவன்மலை கோபால் உள்ளிட்ட இளைஞர்கள் தங்களது கிராமத்தில் உள்ள 700-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி, பருப்பு, முட்டை உள்ளிட்ட மளிகைச் சாமான்கள் உள்ள தொகுப்பினை வழங்கி இன்று உதவிக்கரம் நீட்டினர்.
சிங்கையன்புதூர் இளைஞர்களின் இந்த செயல் கிராம மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. இதில், இந்து முன்னணி நிர்வாகி ஈஸ்வரன், சுரேஷ்குமார், பார்த்தசாரதி, கணேசன், கருப்பசாமி உள்ளிட்ட பலர் மளிகைப் பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.