கோவை: கோவை கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு மாவட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவை: கோவை கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு மாவட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ள நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்குடன் கூடிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுப் பரவல், தமிழகத்தில் கோவை முதலிடத்தில் உள்ளது. இந்தத் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.
இந்தநிலையில், தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும், எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சிறப்பு அதிகாரி ஜெகநாதன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன், கோவை மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் மற்றும் சுகாதாரத்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்தில் நடைபெற்ற முடிவுகள் குறித்து செய்திக் குறிப்பு வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.