கோவை அன்னூர் அருகே டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் திருடிய மேலும் 5 பேர் கைது!

கோவை: கோவை அன்னூர் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் திருடிய மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கோவை அன்னூர் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் திருடிய மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை அன்னூர் அருகே உள்ள காக்கா பாளையத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. கடந்த 26ம் தேதி இந்த கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 90 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து, டாஸ்மாக் கடையில் திருடிய அவர்களை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பச்சாபாளையம் பகுதியில் வைத்து சூலூரில் வேலை பார்த்து வந்த மதுரையைச் சேர்ந்த சக்திவேல் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் திருட்டில் தொடர்புடைய அவர்களை போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.

இந்த நிலையில், தனிப்படை போலீசார் அன்னூர் தாசம்பாளையம் பிரிவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேரை நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் கிடுக்கிபிடி விசாரணை நடத்தியதில் அவர்கள் காக்காபாளையம் டாஸ்மாக் கடைகள் திருடியதை ஒப்புக்கொண்டனர்.



தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மதுரை அலங்காநல்லூரைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (24), திருவாரூர் மாவட்டம் தேவகண்ட நல்லூரைச் சேர்ந்த ஆகாஷ் (22), திருப்பூரைச் சேர்ந்த வெங்கடேசன் (29), மதுரையைச் சேர்ந்த கார்த்திக் (21), அன்னூர் உள்ள குட்டை புதூரைச் சேர்ந்த நாராயணன் (35), என்பது தெரியவந்தது.



இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...