கர்நாடகாவில் இருந்து கோவைக்கு மது பாட்டில்களை கடத்தி வந்த லாரி டிரைவர் உட்பட 2 பேரை கைது - 320 மதுபாட்டில்கள் பறிமுதல்!

கோவை: கர்நாடகாவில் இருந்து கோவைக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை கடத்தி வந்த லாரி டிரைவர் உட்பட 2 பேரை கைது செய்த போலீசார், 320 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


கோவை: கர்நாடகாவில் இருந்து கோவைக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை கடத்தி வந்த லாரி டிரைவர் உட்பட 2 பேரை கைது செய்த போலீசார், 320 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கோவை மேட்டுப்பாளையம் காரமடை, ரோடு பாரதி நகரில் உள்ள ஒர்க்ஷாப்பில் கர்நாடகாவில் இருந்து லோடு ஏற்றி வந்த லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த லாரியில் மதுபாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜபிரபு, இளவேந்தன், வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லாரியை சோதனை செய்தனர்.

அப்போது, லாரியில் 320 மது பாட்டில்கள் மற்றும் 48 மது பாக்கெட்டுகளை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் லாரி டிரைவர் காரமடை காந்தி நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் (40) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் கர்நாடகாவிலிருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்கள் கடத்தி வந்ததற்காக லாரி டிரைவர் ராஜேந்திரன் லாரி கிளீனர் மேட்டுப்பாளையம் எம்.எஸ். நகரைச் சேர்ந்த முனியப்பன் என்ற பாபு (43), ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் கடத்தி வந்த மது பாட்டில்களின் மதிப்பு 3 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...