கோவை பெண் போலீஸ் சாவில் மர்மம்: விசாரணை தொடக்கம்..!

கோவை: கோவையில் ஜன்னல் கம்பியில் தூக்கு மாட்டிய நிலையில் பூட்டிய அறைக்குள் பெண் போலீஸ் பிணமாகக் கிடந்தார். எனவே, அவருடைய சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார் அளித்துள்ள நிலையில், போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோவையில் ஜன்னல் கம்பியில் தூக்கு மாட்டிய நிலையில் பூட்டிய அறைக்குள் பெண் போலீஸ் பிணமாகக் கிடந்தார். எனவே, அவருடைய சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார் அளித்துள்ள நிலையில், போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள கஞ்சம்பமடியைச் சேர்ந்தவர் ராம்அழகு என்பவரின் மகள் மகாலட்சுமி (25). திருமணமாகாத இவர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் கோவை மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீஸாகப் பணியாற்றி வந்தார். இதற்காக அவர் கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் தங்கி இருந்து வந்தார்.

மகாலட்சுமிக்கும், அவருடன் பணியாற்றி வரும் நெல்லையைச் சேர்ந்த போலீஸ்காரர் அருண் குமாருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இந்நிலையில் வீட்டின் படுக்கை அறையில் உள்ள ஜன்னல் கம்பியில் கழுத்தில் கயிறு கட்டி தூக்கு மாட்டிய நிலையில் பிணமாகக் கிடந்தார். அவருடைய உடல் முட்டிப்போட்ட நிலையில் தரையில் இருந்தது. இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே மகாலட்சுமியின் சாவில் மர்மம் இருப்பதாக அவருடைய உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:-

‘‘மகாலட்சுமிக்கு நாங்கள் மாப்பிள்ளை பார்த்து வந்தோம். அப்போது அவர் தன்னுடன் பணியாற்றும் சக போலீஸ்காரர் ஒருவரை காதலிப்பதாகத் தெரிவித்தார். அவர்கள் காதலை ஏற்றுக்கொண்டோம். ஆனால், காதலரின் வீட்டில்தான் சம்மதம் தெரிவிக்கவில்லை. மேலும், மகாலட்சுமி மிகவும் தைரியமானவர். அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை.

திடீரென மகாலட்சுமி இறந்து இறப்பது சந்தேகத்தை எழுப்புகிறது. அதுபோன்று அவர் இறந்து கிடந்த விதத்தைப் பார்க்கும்போது அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இல்லை. யாரோ கொலை செய்துவிட்டு ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்டவாறு செய்து இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. ஆனால், போலீஸார் தற்கொலை செய்து உள்ளார் என்று கூறுகிறார்கள். எனவே, இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும்'' இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘ஜன்னல் கம்பியில் கயிறு மாட்டி தரையில் அமர்ந்து இருந்தவாறு மகாலட்சுமி பிணமாகக் கிடந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அத்துடன் அவர் அறையில் இருந்த செல்போன் மற்றும் டைரியைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...