திருப்பூர்: திருப்பூரில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மத்திய அரசுக்கு எதிராக கோரிக்கைகளை வலியுறுத்தி நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு வேண்டுகோளுக்கிணங்க விவசாயத்தை கார்ப்பரேட் கையில் ஒப்படைக்கும் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், மின்சார திருத்த சட்டத்தை கைவிடக் கோரியும், விவசாய உற்பத்தி பொருட்களுக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் ஆணைய பரிந்துரைபடி விலை நிர்ணயம் செய்ய கோரியும், டெல்லியில் ஆறு மாதமாக போராடி வரும் விவசாயிகளை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் அலுவலகம் முன்பாக சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி, மத்திய அரசுக்கு எதிராக நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.