கோவையில் தடுப்பூசி போடும் பணியில் டோக்கன் வழங்குவதில் திமுக - அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு!

கோவை: கோவை அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் தடுப்பூசி போடும் பணியில் டோக்கன் வழங்குவதில் திமுக அதிமுகவினர் இடையே சில நேரம் வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


கோவை: கோவை அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் தடுப்பூசி போடும் பணியில் டோக்கன் வழங்குவதில் திமுக அதிமுகவினர் இடையே சில நேரம் வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

கோவையை அடுத்த துடியலூர் வெள்ளக்கிணறு அரசு உதவி பெறும் பள்ளியில் தடுப்பூசி போடும் பணி நேற்று நடைபெற்றது. கவுண்டம்பாளையம் தொகுதி பி. ஆர். ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, முறையாக டோக்கன் வழங்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். உடனடியாக அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையாக டோக்கன் வழங்கி பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என கூறிவிட்டுச் சென்றார்.

அப்போது, அங்கிருந்த திமுக பிரமுகர் ஒருவர் தடுப்பூசி போட அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் செய்து வருகிறோம். நாங்கள்தான் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கி இருக்கிறோம். இதில் நீங்கள் தலையிட வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது.



இதனால் அங்கிருந்த அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, அவர்களை அங்கு இருந்தவர்கள் சமாதானம் செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...