தமிழ்நாட்டிற்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு தாமதமின்றி வழங்க வேண்டும்: பி.ஆர்.நடராஜன் எம்பி வலியுறுத்தல்

கோவை: கொரோனா தடுப்பூசி செலுத்த தமிழ்நாட்டு மக்கள் ஆர்வம் செலுத்தி வருகிற நிலையில் தேவைக்கேற்ப மத்திய அரசு தடுப்பூசிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்காமல் இருப்பது ஏற்புடையதல்ல. உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் கேட்ட எண்ணிக்கையை மத்திய அரசு வழங்க வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தினார்.


கோவை: கொரோனா தடுப்பூசி செலுத்த தமிழ்நாட்டு மக்கள் ஆர்வம் செலுத்தி வருகிற நிலையில் தேவைக்கேற்ப மத்திய அரசு தடுப்பூசிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்காமல் இருப்பது ஏற்புடையதல்ல. உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் கேட்ட எண்ணிக்கையை மத்திய அரசு வழங்க வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தினார்.

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை கோவை மாவட்டத்தில் தீவிரமாகப் பரவி வந்தது. இதனை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு மாவட்ட நிர்வாகம் தீவிரமான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற 20 நாட்களுக்குள் கோவை மாவட்டத்திற்கு இரண்டு முறை பயணம் செய்து பணிகளை முடுக்கிவிட்டார். இதேபோன்று உணவுத்துறை அமைச்சர், வனத்துறை அமைச்சர் கோவை மாவட்டத்திலேயே தங்கி பணியாற்றி வருகின்றனர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தொடர்ந்து அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை வழங்குவதும். பொதுமக்களிடம் இருந்து வருகிற கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்ப்பது உள்ளிட்ட களப்பணிகளை மேற்கொண்டு வருகின்றார். இதன் ஒருபகுதியாக வெள்ளியன்று கோவை சித்தாபுதூர், மசக்காளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்டார். மேலும் அங்கு பணியாற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உற்சாகமூட்டினார்.

முன்னதாக அவர் கூறுகையில், ‘‘தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் மிகுந்த ஆர்வத்தை காட்டி வருகின்றனர். எங்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று கோவை மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டம் கூட நடைபெறும் வகையில் தடுப்பூசி செலுத்த மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. ஆனால், தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசியை மத்திய அரசு தர மறுக்கிறது. தமிழகத்தை காட்டிலும் குறைவான மக்கள் தொகை குறைவாக உள்ள பாஜக ஆளும் மாநிலங்களுக்கு தடுப்பூசிகளின் எண்ணிக்கை அதிகரித்து வழங்குகிறார்கள். ஆனால், தமிழகத்திற்கு குறைந்த அளவே தடுப்பூசி வழங்குகிறது. மாநில அரசின் தடுப்பூசிகள்தான் இப்போது செலுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை புறக்கணித்து பாரபட்சத்தோடு நடக்கிறது. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவோம் என பிரதமர் தம்பட்டம் அடித்தால் மட்டும் போதாது. அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர்கள் மாநில திமுக அரசை குறைகூறுவதை விடுத்து மத்திய அரசிடம் நமது தமிழ்நாட்டின் கோரிக்கையை நிறைவேற்ற குரல் கொடுக்க வேண்டும்'' என்றார்.



முன்னதாக கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் எச்எம்எஸ் தொழிற்சங்கத்தின் சார்பில் மருத்துவத்துறை ஊழியர்களுக்கு ஆயிரம் பாட்டில் குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதனை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தொடங்கி வைத்தார். எச்எம்எஸ் சங்கத்தின் தலைவர் ராஜமாணி முன்னிலை வகித்தார். இதில், இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூரத்தி, செயற்குழு உறுப்பினர் ஆர்.வேலுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...