கோவை: கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறி சுற்றித் திரிந்தவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

கோவை மாவட்டத்தில் ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியே சென்றவர்கள் மீது நேற்று(04/06/2021) கோவை மாவட்டக் காவல்துறையினர் 1315 வழக்குகள் பதிவு செய்தனர். அதில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது 259 வழக்குகள், சமூகஇடைவெளி கடைப்பிடிக்காதவர்கள் மீது 40 வழக்குகளும் மற்றும் அரசு விதியை மீறி தேவையின்றி வாகனத்தில் சென்றவர்கள் மீது 804 வழக்கங்களும், அத்தியாவசியத் தேவையின்றி வாகனத்தில் சென்றவர்கள் மீது 212 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 271 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
அத்துடன், பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வராமல் கொரோனா பெருந்தொற்று என்ற கொடிய நோயிலிருந்து பாதுகாப்பாக இருங்கள் என்று அறிவுறுத்தினர்.