கோவை: கோவையில் கொரோனா சிகிச்சைக்கு வந்த பெண்ணின் 10 பவுன் நகை மாயமானது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு, ராமநாதபுரத்தை சேர்ந்த வீரக்குமார் (55) மற்றும் அவரது மனைவி சாந்தி (45) ஆகியோர், மே 19ல் கொரோனா சிகிச்சைக்கு வந்தனர். மே 24 வரை சிகிச்சையில் இருந்தனர். மே 24க்கு பின், சாந்தி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் அணிந்திருந்த, 10 பவுன் தங்க நகையை அங்குள்ள செவிலியரிடம் கழற்றிக் கொடுத்து, பத்திரமாக வைத்திருக்குமாறு தெரிவித்தார்.
இதையடுத்து, செவிலியர் மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அதிகாரியிடம் கொடுத்துள்ளார். அவர், தனது மேஜை டிராயரில் வைத்துள்ளார். நகையை திரும்ப கேட்டபோது, தர மறுத்துள்ளார். இது தொடர்பாக, சரவணம்பட்டி போலீசில் வீரக்குமார் புகார் செய்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.