கோவை: வால்பாறையில் யானை தாக்கி இறந்த காவலாளி மாணிக்கம் குடும்பத்திற்கு முதல் கட்ட நிவாரணமாக 50 ஆயிரம் ரூபாயை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி வழங்கினார்.

பொள்ளாச்சியை அடுத்த வால்பாறை அருகே வாட்டர் பால்ஸ் பகுதியில் காவலாளியாக பணியாற்றி வரும் மாணிக்கம் நேற்று அதிகாலை காவல் பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த காட்டு யானை மாணிக்கத்தை தூக்கி வீசியது. இதில் பலத்த காயமடைந்த மாணிக்கம் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு விரைந்த வனத்துறையினர், இறந்த மாணிக்கத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவலறிந்து அரசு மருத்துவமனைக்கு வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, அவரது ஆதரவாளர்களுடன் வந்தார். அப்போது, பிரேதப் பரிசோதனையை விரைந்து முடித்துத் தரவேண்டும் என்று மருத்துவர் மஞ்சுளாதேவியிடம் கூறியபோது, அவர் மறுத்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.

இந்த நிலையில், வனத்துறை சார்பில் மாணிக்கம் குடும்பத்திற்கு முதல்கட்ட நிவாரணமாக ரூ 50,000 பணத்தை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, வழங்கினார். அப்போது, திமுக கோவை மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் உடனிருந்தார்.