கோவை: வளர் இளம் பருவத்தில் ஊருக்குள் நடந்த சில நிகழ்வுகளால் ஊர் மக்கள் சார்பில்' 46 பேர்' என வைக்கப்பட்ட புனை பெயரையே ஒரு அமைப்பின் பெயராக வைத்துக் கொண்டு 25 இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பல்வேறு நற்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு இன்று அதே ஊர் மக்களால் போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரியவர்களாக மாறியுள்ளனர்.

'46 நண்பர்கள்' குழு தலைவர் பிரனேஷ் கூறியதாவது, " சின்ன தடாகத்தில் வசிக்கிறேன். நான் உள்ளிட்ட 25 நண்பர்கள் ஒன்றாக பழகி வருகிறோம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவில் திருவிழாவின்போது ஏற்பட்ட ஒரு சிறு தகராறு சம்பவத்தை தொடர்ந்து ஊர் மக்கள் அனைவரும்' அந்த 46 பேர் இவங்கதான்' என்று புனைப்பெயர் வைத்து பேச துவங்கினர்.
எங்கள் நண்பர்கள் அனைவரையும் தவறாக நினைத்த, ஊர் பொதுமக்கள் முன்னிலையில் நன்மதிப்பு பெற்று சிறப்பாக வாழ வேண்டும் என முடிவு செய்து அவர்கள் வைத்த அதே புனைப் பெயரை கொண்டு '46 நண்பர்கள்' என்ற குழுவை தொடங்கினோம்.
குழு துவங்கும் போது நாங்கள் கல்லூரி மாணவர்களாக இருந்தோம் இன்று நான் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகவும், எனது நண்பர்கள் அனைவரும் பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று செயல்பட்டு வருகின்றனர். இருந்தபோதும் எங்கள் குழு சார்பில் தொடர்ந்து ஊர் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் எங்கள் ஊரில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் வளாகத்தை சுத்தம் செய்வது பெண்கள் பள்ளியில் தானியங்கி நாப்கின் வெண்டிங் மெஷின் பழுது செய்து தருவது குடிநீர் சுத்திகரிப்பு மெஷின் பராமரித்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதுதவிர கல்வியில் சிறந்து விளங்கும் ஏழை மாணவ மாணவியருக்கு கல்வி தொடர நிதி உதவி வழங்கி வருகிறோம்.

நாங்கள் செய்த நல்ல செயல்களால் தற்பொழுது எங்கள் குழுவில் 170க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் வணிகர்கள், வர்த்தகர்கள் தொழிலதிபர்கள் என அனைத்து தரப்பினரும் எங்கள் குழுவில் சேர்ந்துள்ளனர்.

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை மற்றும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு காலை மற்றும் மதியம் இலவசமாக உணவு வழங்கி வருகிறோம். இதுதவிர கபசுர குடிநீர் விநியோகம் செய்து வருகிறோம்.
இவை எல்லாவற்றுக்கும் மேல் நோய் தொற்று தடுப்பு விழிப்புணர்வுக்காக வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் ஊர் முழுவதும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் முக கவசம் அணிதல் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் என்பது உள்ளிட்ட நோய்தொற்று தடுப்புக்கு மக்கள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
கோயில் திருப்பணிக்கு நன்கொடை கேட்டபோது அதற்கு நிதியுதவி வழங்க சிலர் முன் வரவில்லை. ஆனால் தற்பொழுது நாங்கள் ஏழை மற்றும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவளித்து வருவதை அறிந்து ஊர் மக்கள் அனைவரும் தங்களால் முடிந்த நிதி உதவி பொருள் உதவி யை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இது எங்கள் அனைவருக்கும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவை எல்லாவற்றுக்கும் மேல் எங்கள் குழு சார்பில் கொரோனா நோய் தொற்றால் பெற்றோர்கள் இருவரையும் இழந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த கல்லூரி மாணவருக்கு கல்வி செலவை ஏற்று உள்ளோம். இதேபோல் பாதிக்கப்பட்டுள்ள மற்றொரு மாணவியின் கல்வி செலவையும் ஏற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். எங்கள் குழு சார்பில் எதிர்வரும் காலங்களில் மேலும் பல நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு தொடர்ந்து செய்து வருவோம். எந்த ஊர் மக்கள் எங்களுக்கு புனைப்பெயர் வைத்தார்களோ அவர்களே இன்று எங்களை பாராட்டும் வகையில் நடப்பது எங்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது."
இவ்வாறு அவர் கூறினார்.