கோவை: வால்பாறை அருகே உள்ள எஸ்டேட்டில் பணியாற்றிய காவலர் யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
மேலும், யானைகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து வீடுகள், மளிகை கடைகள், சத்துணவு மையங்கள், ரேஷன் கடைகளை உடைத்து உள்ளிருக்கும் உணவுப் பொருட்களை சாப்பிட்டு சேதப்படுத்தி வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வால்பாறை அருகே வாட்டர் பால்ஸ் இரண்டாவது பிரிவில் உள்ள டென்னிஸ் பங்களாவில், இரவு காவலராக பணிபுரியும் மாணிக்கம் (60) நேற்று இரவு பங்களாவில் இரவு காவலராக பணியாற்றி வந்துள்ளார். வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை ஒன்று பங்களாவிற்குள் நுழைந்து சுற்றித்திரிந்து வந்துள்ளது.

அப்போது, எதிர்பாராதவிதமாக மாணிக்கம் என்பவரை தாக்கி கொன்றது. இதில் அதிகாலை 4 மணி அளவில் மாணிக்கம் யானை தாக்கி உயிரிழந்தார். சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினரும் வனத்துறையினரும் மாணிக்கம் உடலை கைப்பற்றி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.