கோவை ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் கலைஞர் பிறந்தநாள்... 200 மரக்கன்றுகள் நடப்பட்டன..!

கோவை: கோவைப்புதூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா தொழில் நுட்பக் கல்லூரி சார்பில் கல்லூரி வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு 200 மரக்கன்றுகள் நடப்பட்டன.


கோவை: கோவைப்புதூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா தொழில் நுட்பக் கல்லூரி சார்பில் கல்லூரி வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு 200 மரக்கன்றுகள் நடப்பட்டன.

கோவை வனக்கோட்டம், மதுக்கரை வனச்சரகம் மற்றும் கோவைப்புதூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா தொழில் நுட்பக் கல்லூரி சார்பில் கல்லூரி வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு 200 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதனைத் தொடர்ந்து, கல்லூரி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘‘மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியின் 98-வது பிறந்த தினம் கோவை வனக்கோட்டம், மதுக்கரை வனச்சரகம் மற்றும் கோவைப்புதூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா தொழில் நுட்பக் கல்லூரி சார்பில் கொண்டாடப்பட்டது.

கலைஞர் மு.கருணாநிதியின் நினைவாக 200 மரக் கன்றுகள் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டன. இந்தநிகழ்ச்சியில், கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர், எஸ்.மலர்விழி முன்னிலை வகிக்க, கோவை, வனக்கோட்டம் உதவி வனப் பாதுகாவலர் செந்தில்குமார் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் கே.சுந்தரராமன், கல்லூரியின் முதல்வர் முனைவர் சீனிவாசன் ஆளவந்தார், வனச்சரக அலுவலர், கல்லூரியின் நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வேம்பு, புங்கன், மகாகனி உட்பட பல்வேறு வகையான மரங்கள் நடவு செய்யப்பட்டன. மரக்கன்றுகள் நடப்பட்டது மட்டுமின்றி அவற்றை பராமரிக்கவும் கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இக்கல்லூரி வளாகத்தில், மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவாகவும் மற்றும் மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்ட பிரபலங்கள் சார்பில் நடப்பட்ட மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு முழுமையாக வளர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது'' என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...