கோவை: முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் 98வது பிறந்த நாளை முன்னிட்டு, ‘ஆலம் விழுதுகள்' அறக்கட்டளை சார்பில் 500 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் 98 வது பிறந்த நாளை முன்னிட்டு, ‘ஆலம் விழுதுகள் அறக்கட்டளை'யின் சேர்மனும், திமுக மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளருமாகிய திருமதி மீனா ஜெயகுமாரின் வழிகாட்டுதலின்படி, அண்ணாநகர், பீளமேடு புதூர், கோவை அரசு மருத்துவமனை மற்றும் போத்தனூர் உள்ளிட்ட இடங்களில் அறக்கட்டளையின் உறுப்பினர் மூலமாக உணவின்றி தவிக்கும் மக்கள் 500 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
‘‘திருமதி மீனா ஜெயகுமார், சமூக பணிச்சுமை காரணமாக உடல் நலம் பாதித்து மருத்துவ ஓய்வில் உள்ளார். அவர் விரைவில் பூரண குணம் அடைந்து மீண்டும் மக்கள் பணியில் தன்னை இணைத்துக் கொள்வார் என்பதை ஆலம் விழுதுகள் அறக்கட்டளையின் உறுப்பினர் சார்பாக தெரிவித்து கொள்கிறோம்'' என்று அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.