கோவை: கோவையில் பெண் போலீஸ் ஒருவர் காதல் விவகாரத்தில், போலீஸ் குடியிருப்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மதுரை பேரையூர் தாலுகா கெஞ்சம்பட்டி, பட்டி காளியம்மன் கோயில் தெரு பகுதியில் வசிப்பவர் ராமழகு. இவருடைய மகள் மகாலட்சுமி வயது 25, கோவையில் உள்ள நாலாவது பெட்டாலியனில் ஆயுதப் படை காவலராக பணிபுரிந்து வந்தார். இவர் கோவை அவிநாசி சாலை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் தங்கி வேலை பார்த்து வந்தார். திருமணமாகாதவர். இவர் கோவையில் தன்னுடன் பணிபுரியக்கூடிய அருண்குமார் என்கின்ற காவலரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், காதல் விவகாரம் அவருடைய வீட்டிற்கு தெரிய வரவே வீட்டில் இவருக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கியுள்ளனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மகாலட்சுமி மன உளைச்சலுடன் காணப்பட்டுள்ளார். நேற்று மாலை பணி முடிந்தவுடன் உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள தன்னுடைய போலீஸ் குடியிருப்புக்கு சென்றார். பிறகு இரவு அவருடைய காதலன் அருண்குமார் மகாலட்சுமிக்கு போன் செய்துள்ளார். தொடர்ந்து போனை எடுக்காமல் இருந்ததால் அருண்குமார் அதிர்ச்சி அடைந்து நேரடியாக வீட்டிற்குச் சென்று பார்த்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. வீட்டுக் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது அவர் தங்கியிருந்த வீட்டின் பாத்ரூம் ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.
இதுகுறித்து அருண்குமார் ரேஸ்கோர்ஸ் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். இந்தநிலையில், ஆயுதப்படை பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேல் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து உடலைக் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். பெண் போலீஸ் தூக்குப்போட்டு இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.